திருநள்ளாறு என்பது உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் உள்ளது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படிசனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இன்று (டிசம்பர் 27) அதிகாலை 3 மணிக்கு திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோவில் நடை திறக்கப்பட்டு பால், பன்னீர், தேன், மஞ்சள் உள்ளிட்ட 27 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 5:22 மணிக்கு சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். மகர ராசியில் சனி பகவான் 20.12.2023 வரை இருந்து பலன்களை வழங்க உள்ளார். சனி பகவானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

கொரோனா பிரச்சனையால் நளன், பிரம்ம குளத்தில் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூட்டத்தை கண்காணிக்க பல பகுதிகளில் 200க்கு மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.பல தொலைக்காட்சி சேனல்கள் சனிப்பெயர்ச்சி விழா நேரடி ஒளிபரப்புசெய்தன. தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள் செய்ய மிகவும் கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளது
1 Comment
Pingback: சாதனை படைத்த Mohammed Siraj - TamilCpu