இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியது.தமிழகமெங்கும் திரையரங்குகளில் பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் OTT தளமான அமேசான் பிரைம் வீடியோ வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து உலகமெங்கும் வெளியானது. கொரோனாவால் தொடங்கியிருந்த திரை அரங்குகளுக்கு இந்த திரைப்படம் புத்துணர்ச்சி அளித்தது. மாஸ்டர் படம் பார்க்க ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் என கூட்டமாக திரையரங்குகளுக்கு படை எடுத்தனர். இந்த நிலையில்தான் மாஸ்டர் திரைப்படம் அமேசன் பிரைம் தளத்தில் வெளியானது.

அதன்படி அமேசான் தளத்தில் மாஸ்டர் திரைப்படத்திற்கான ஒரு ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன்மூலம் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டிலிருந்து இந்த திரைப்படத்தை HD தரத்துடன் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில் அமேசான் பிரைம் வெளியாவதால் திரையரங்குகளில் வெளியிட முடியாத இடங்களில் கூட மாஸ்டர் திரைப்படத்தை காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
அமேசான் பிரைம் வீடியோ வின் இந்தியப் பிரிவு தலைவர் விஜய் சுப்பிரமணியன் கூறுகையில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் . இந்த திரைப்படத்தை அமேசான் தளத்தில் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி இதன் மூலம் இந்தியா மற்றும் 240 நாடுகளில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு பாதுகாப்பாக பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்
1 Comment
Pingback: 5ஜி இணைய சேவை தயார் ஏர்டெல் அறிவிப்பு - TamilCpu